Monday, May 27, 2019

Family Mediclaim


உடல்நலக் காப்பீட்டு பாலிசியை தேர்ந்தெடுப்பதற்கு முன்பு நாம் செய்ய வேண்டியவை என்ன என்பதை பார்க்கலாம். பாலிசி எடுத்துவிட்டால், இனி என்ன நோய் வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்றிருக்க கூடாது. அனைத்து பாலிசிகளிலும் ஒரு சில கட்டுப்பாடுகள், விதிவிலக்குகள் உள்ளன. அவற்றைப் படித்து தெளிந்த பிறகு முடிவெடுப்பது நல்லது. உங்களுக்காக் ஒரு சில உதாரணங்கள் இங்கே. 1. நம்மிடம், ஏற்கனவே இருக்கும் நோய்களுக்கு, பாலிசி மூலம் பயன் பெற முடியாது. It will be covered after certain waiting period (4 years) 2. உடல் நலக் காப்பீட்டு பாலிசிகளில் மருத்துவச் செலவுகளுக்கு பல விதி விலக்குகள் உண்டு. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் எவ்வளவு பணம் தர வேண்டும், எத்தனை நாள் தர வேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகள் இருக்கும். மருத்துவச் செலவில் நாமும் நமது பங்கிற்கான பணத்தைத் தர சொல்வதாக கூட இருக்கலாம். எந்தெந்த மருத்துவமனைகளில் பாலிசிகள் செல்லுபடியாகும் என்பதும் இதில் அடங்கும். 3. வருடா வருடம் பாலிசி புதுப்பிக்கப்பட வேண்டும். அதனை புதுப்பிப்பதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகளை வைத்திருக்கின்றனர். 4. பாலிசி எடுப்பதற்கு வயது உச்ச வரம்பு உள்ளது. பெரும்பாலும், குறிப்பிட்ட வயதிற்கு உட்பட்டவராக இருப்பவர்களுக்கு மட்டுமே உடல் நலக் காப்பீட்டு பாலிசிகள் வழங்கப்படுகின்றன. 5. சர்க்கரை வியாதி, ரத்த சோகை போன்ற நமக்கு ஏற்கனவே உள்ள நோய்களை ஒளிவு மறைவின்றி தெரிவிக்க வேண்டும். 6. பாலிசி எடுப்பவரின் வயதைப் பொறுத்து மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டி இருக்கும். அந்நிறுவனம் கூறும் வழிமுறைகளுக்கும், ஆவணங்களுக்கும் சம்மதம் தெரிவிக்க வேண்டும். 7. அப்படி மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டுமென்றால் எங்கு, எப்படி செய்து கொள்ள வேண்டும்? அதற்கான செலவை யார் ஏற்பது? போன்ற விவரங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். 8. பாலிசி தொடர்பான அனைத்து விவரங்களைப் படித்து, தெளிவு பெற்ற பிறகே பிரீமியம் தொகையை செலுத்துங்கள். 9. அந்தப் பாலிசியின் தன்மையை அறிந்து, அவர்களின் சேவையை மதிப்பீடு செய்து, வருடா வருடம் பாலிசியை புதுப்பித்துக் கொள்ளுங்கள். for Health Insurance Services, needs, Call 98401 77017 Devarajan www.starhealthdevarajan.com

No comments:

Post a Comment