Friday, May 24, 2019

ஹெல்த் இன்ஷூரன்ஸ்


எந்த நோய்க்கு எவ்வளவு க்ளெய்ம் கிடைக்கும், எந்த நோய்களுக்கு எல்லாம் க்ளெய்ம் கிடைக்காது என்பதை அவசியம் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். பாலிசி எடுக்கும்போது, ஏதேனும் நோய் இருந்தால் அதைச் சொல்ல வேண்டும். பிரீமியம் கூடுமோ என்று சொல்லாமல் விட்டால், பின்னர் அந்த நோய்க்கு சிகிச்சை எடுத்து க்ளெய்ம் செய்தால், அது மறுக்கப்பட வாய்ப்புள்ளது. மருத்துவமனையில் 24 மணிநேரம் தங்கி இருந்து சிகிச்சைப் பெற்றிருந்தால் மட்டுமே ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகளில் க்ளெய்ம் கிடைக்கும். ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகளில் பணத்தை க்ளெய்ம் செய்வதில் கேஷ்லெஸ் (Cashless) மற்றும் ரீ-இம்பர்ஸ்மென்ட் (Reimbursement) என இரண்டு வகைகள் உள்ளன. கேஷ்லெஸ் வசதியில் கூடுதல் க்ளெய்ம் கிடைக்க வாய்ப்புள்ளது. பெரும்பாலும் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் தொடர்பில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டால், கேஷ்லெஸ் க்ளெய்மில் சிகிச்சைப் பெற்றுக் கொள்ளலாம். அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போதே எதற்கெல்லாம் க்ளெய்ம் கிடைக்கும், கிடைக்காது என்பதை மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துவிடும். இன்ஷூரன்ஸ் நிறுவனமே நேரடியாக சிகிச்சைக்கான பணத்தைச் செலுத்திவிடும். ஆனால், மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டபின் பில்களைச் சமர்ப்பித்து ‘ரீஇம்பர்ஸ்மென்ட்’ பெறும் போது, ஒவ்வொரு சிகிச்சைக்கும் தனித்தனியாக க்ளெய்ம் தொகையைக் குறைக்க வாய்ப்புள்ளது. இப்படி செய்யும்போது, இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கும் நமக்கும் சில முரண்பாடுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன” என்று கூறி முடித்தார். நாம் இன்று ஆரோக்கியமாகத்தானே இருக்கிறோம்; எதற்கு இந்த வீண் செலவு என்று இல்லாமல் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துவிடுவது நல்லது. for Health Insurance Services, Needs, U can call 98401 77017 Devarajan www.starhealthdevarajan.com

No comments:

Post a Comment