Road safety Week
சாலை சைகைகள்
சாலைகளில் உள்ள சைகைகள் போக்குவரத்தை சீர் செய்யவும், பாதாசாரிகளை பாதுகாக்கவும், பயன்படுகிறது. சாலைகளிலுள்ள சைகைகளை அறிவிப்புக்களாகக் கருதப்பட வேண்டும்.
சாலை சைகைகளை
1.உத்தரவு சைகைகள்
2.எச்சரிக்கைச் சைகைகள்
3.தகவல் சின்னங்கள் என மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.
குறுக்குச் சாலையிலுள்ள போக்குவரத்து ஒளி விளக்கு மற்றும் நிறுத்தலர் விளக்குகள் எப்பொழுது பாதசாரிகள் சாலையைக் கடக்கலாம் என்பதைத் தெரிவிக்கிறது. சாலையில் செல்லும் வண்டிகளைக் கட்டுப்படுத்துகிறது.
போக்குவரத்து விளக்குகளில் சிவப்பு விளக்கு எரிந்தால் நில், செல்லாதே என்றும், மஞ்சள் விளக்கு எரிந்தால் சாலையைக் கடக்கத் தயாராக இரு என்றும், பச்சை விளக்கு எரிந்தால் செல் என்றும் அறிவிக்கின்றது.
போக்குவரத்து காவல்துறையினர் தங்களது கைகளைப் பயன்படுத்தி போக்குவரத்தினை முறைப்படுத்துதல், சீர் செய்தல் போன்றவற்றை மேற்கொள்கின்றனர்.
வேண்டும் பெற்றோருக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு!
அதுவே பிள்ளைகளின் நல்வாழ்வு !
சாலையில் அவசரம் என்ன அவசரமோ ?
தவறினால் உயிரும் திரும்ப வருமோ ?
உரியவயதில் எட்டுபோட்டு உரிமம்வாங்கி
உயிர்காக்க தலைக்கவசம் அணிவோம் !
சர்க்கஸ் சாகசம் சாலையில் வேண்டாம் !
சாகாவரம் வாங்கல யாரும் !
சாலை குறியீடுகளை மறைத்து வாகனங்களை நிறுத்தாதே !
விபத்து நடக்கலாம் மறக்காதே !
ஓய்வின்றி வாகனம் ஓட்டாதீர் !
நிரந்தர ஒய்வு அடையாதீர்!
இரவில் வாகனத்தில் வெளிச்சத்தை தாழ்த்துவீர் !
உங்கள் வாழ்நாளை நீட்டிப்பீர் !
சாலைப்பயணத்தில் செல்போன் பேச்சு !
விபத்தால் உயிரே போச்சு !
எண்பதுகளில் சென்று அப்பளமாக நொறுங்காதே !
ஐம்பதுகளில் பாதுகாப்பாக பயணம் செய் !
விருப்பமான திருமணவாழ்வை நீடுழிவாழ !
விவாகரத்து செய்வோம் அதிவேகம்
Call 98401 77017 Devarajan for Insurance Services
No comments:
Post a Comment