Sunday, February 3, 2019

Road Safety Week


30th Road Safety Week. சாலை பாதுகாப்பு வாரம். 04.02.19 to 10.02.19 ஒவ்வொருவரும் சாலை பாதுகாப்பு பற்றியும் சாலை பாதுகாப்பு சட்டங்கள் பற்றியும் அறிந்திருக்க வேண்டும். சாலைப் போக்குவரத்து உதவிக்குத் தொலைபேசியின் மூலம் 103ஐ தொடர்பு கொள்ளலாம். சாலைப் பாதுகாப்பில் முக்கிய விதிகள் வாகன ஓட்டுநர்கள் சாலையின் இடது புறத்திலேயே வாகனங்களைச் செலுத்துதல் வேண்டும். முன் செல்லும் வண்டியினை வாகன ஓட்டுநர்கள் முந்திச் செல்வதைக் கூடுமானவரை தவிர்க்க வேண்டும். வாகன ஓட்டுநர் குறுக்குச் சாலை அல்லது பாதாசாரிகள் கடக்கும் இடங்களில் வண்டியின் வேகத்தைக் குறைத்துச் செல்லல் வேண்டும். தீயணைப்பு வாகனம், அவசர ஊர்தி, மற்றும் நோயாளர் வண்டி போன்றவைகளுக்கு வாகன ஓட்டுநர்கள் தடையின்றி வழிவிடுதல் அவசியமாகும். வாகன ஓட்டுநர்கள் ‘U’ திருப்பம் இல்லாத இடங்களில் தங்களது வாகனங்களை திருப்பக் கூடாது. அனுமதிக்கப்பட்ட இடங்களில்தான் வாகனங்களைத் திருப்ப வேண்டும். தங்கள் வாகனத்தை மெதுவாக ஓட்டும்போது அதற்குரிய சைகையை ஓட்டுநர் காட்ட வேண்டும். வலது புறமாகவோ, அல்லது இடது புறமாகவோ வாகனத்தை திருப்பும் முன் சைகை காட்ட வேண்டும். அதே போல் தனது வாகனத்தை நிறுத்தும் முன் அதற்குரிய சைகையை காட்ட வேண்டும். வாகன ஓட்டுநர்கள் ‘U’ திருப்பம் செய்யும் முன்பும் அல்லது இடப்புறமோ, வலப்புறமோ திருப்பும் முன்பும் வாகனத்தில் உள்ள அதற்குரிய விளக்கினை எரியச் செய்ய வேண்டும். வாகன ஓட்டுநர் ஒரு வழிப்பாதை என்று அறிவிக்கப்பட்ட இடத்தில் அவர் செல்வதற்கோ அல்லது வருவதற்கோ மட்டுமே பயன்படுத்த வேண்டும். செல்வழியன்று என்று அறிவிக்கப்பட்ட ஓரிடத்தினுள் உள்ளே வருதலோ, போதலோ, நுழைதலோ கூடாது. நெடுஞ்சாலைகளில் வண்டிகளுக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள பாதையில்தான் வண்டியைச் செலுத்த வேண்டும். வழித்தடம் மாறும் முன் முறையான சைகையைக் காட்டி வாகனத்தைச் செலுத்த வேண்டும். எக்காரணம் கொண்டும் மஞ்சள் கோட்டினைத் தாண்டிச் செல்லக்கூடாது. வாகன ஓட்டுநர் தேவையில்லாமல் தொடர்ந்து வாகனத்திலுள்ள ஒலிப்பானை பயன்படுத்தல்கூடாது. அமைதி இடம் என்று அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் ஒலிப்பானை ஒலிக்கக் கூடாது. வாகனத்தில் இயந்திரக்கோளாறு இருந்தாலோ, வாகனத்தை இயக்கும் போது அதிக சத்தம் வரும் என்று தெரிந்தாலோ வாகனம் எடுப்பதை தவிர்க்க வேண்டும். வாகன ஓட்டுநர் தனக்குமுன் செல்லும் வாகனத்திற்கும் தனது வாகனத்திற்கும் குறிப்பிட்ட அளவு இடைவெளி இருக்குமாறு சென்றால், வண்டிகள் மோதிக் கொள்ளும் விபத்தினைத் தவிர்க்கலாம். Read at https://www.facebook.com/mediclaimagent/ Star Health Devarajan

No comments:

Post a Comment