உலக பல்மருத்துவர் தினம் - மார்ச் 6
பல் போனால் சொல் போச்சு என்பார்கள். இன்றையநிலையில் பல் போனால் உணவு போனது என்றுதான்அர்த்தம்.
நம் பல்நோயை போக்கும் பல்மருத்துவர்களை போற்றும்விதமாக சர்வதேச அளவில் ஆண்டும் தோறும் மார்ச் மாதம் 6ஆம் தேதி சர்வதேச பல்மருத்துவர் தினம் (World Dentist Day , March 6) ஆக கொண்டாடப்படுகிறது.
வரலாறு...!
கடந்த 1948 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் தேதி நமதுபாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட இந்திய பல்மருத்துவச்சட்டத்தின்படி இந்திய பல் மருத்துவக் கவுன்சில் அமைப்புஉருவாக்கப்பட்டது.
இந்த அமைப்பு இந்தியாவில் பல் மருத்துவத்தின் தரத்தைஅதிகரிக்கவும், பல் அறுவை சிகிச்சை நிபுணர்களின் தரத்தைசர்வதேச அளவுக்கு உயர்த்தவும் நடவடிக்கை எடுத்துவருகிறது.
பல் மருத்துவம் தொடர்பான ஆராய்ச்சிகள், மருத்துவவெளியீடுகள் மற்றும் பல் மருத்துவ அறிவைமேம்படுத்துதல் போன்ற பணிகளுக்கு முக்கியத்துவம்அளித்து வருகிறது. இந்த அமைப்பானது 60 ஆண்டுகள்சிறப்பாக சேவை செய்து வைர விழாவினைகொண்டாடிக்கொண்டிருக்கிறது.
80 சுமார் சதவிகித குழந்தைகள், 60 சதவிகித வயதுவந்தவர்கள் பல் நோயால் பாதிக்கப்படுகிறார்கள். 30வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு 90 சதவிகித பல்நோய்பாதிப்பு காணப்படுகிறது. பல் பிரச்னையால் அதிகம்பாதிக்கப்படுவது முதியவர்கள்தான். 35 சதவிகிதகுழந்தைகள் தெற்றுப்பல் உட்பட்ட கோளாறுகளால்பாதிக்கப்படுகிறார்கள்.
பல் கோளாறு ஏற்பட்டால் அழகு போய்விடும், சுகாதாரம்கெடும். சுருங்கச் சொன்னால், ‘பல் போனால் சொல்போச்சு..!’ .
பொதுவாக, பல் சொத்தை, சரியான பராமரிப்பு இல்லாமை,உடல் சூடாகுதல், பல் இடுக்குகளில் உணவு மற்றும் இறைச்சிதுண்டுகள் மாட்டிக் கொள்வதாலும் பல் வலி ஏற்படும்.
பல்வலி வராமல் இருக்க, வாயிலிருந்து மோசமான வாடைவராமல் இருக்க தினசரி காலையில் எழுந்தவுடன், இரவுபடுக்கை செல்லும் முன் பல் துலக்கினால் பல்வலியிலிருந்துசுலபமாக தப்பிக்கலாம். சாப்பிட்டப் பிறகு பல் துலக்குவதுநல்ல பழக்கம். பொதுவாக, காலையில் எழுந்தவும், இரவுபடுக்கைக்கு செல்லும் முன்னும் பல் தேய்பது நல்லது. பல்பிரச்னை வராமல் இருக்க நிறைய தண்ணீர் குடிக்கவேண்டும்.
ஃபுளோரைட் (Fluoride)கலந்த பற்பசையை பயன்படுத்துவதுமூலம் பல்வலியை தடுக்கலாம். மேலும், ஃபுளோரைட்கலந்த தண்ணீரை குடிப்பதும் நல்லது. கால்சியம் சத்துமிக்கபால் மற்றும் வெண்ணெய் பல்லை வலிமையாக்கவைக்கும். சீனி மற்றும் இனிப்புகளை அதிகம்பயன்படுத்தினால் பல் சீக்கிரமாக சொத்தையாகி விடும்.
ஆப்பிள், தர்ப்பூசணி, ஸ்ட்ராபெர்ரி, வாழைப்பழம், ஆரஞ்ச்போன்றவறை பற்களை பலப்படுத்துபவை. பற்கள் பலமாகஇருக்க உயிர்சத்து சி தேவை.
பல்வலி தினம் ..!
பல்வலி என்பது பின்னால் வரப் போகிற பெரிய நோய்களுக்குஅறிகுறி என்பதால் அதனை அவ்வளவு அசட்டையாகஎடுத்துக் கொள்ள முடியாது என்பதால் அமெரிக்கா போன்றநாடுகளில் ஆண்டு தோறும் பிப்ரவரி 9ஆம் தேதி பல்வலிதினம் (Toothache Day) ஆக அனுசரிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment