காப்பீட்டின் அவசியம் என்ன?*
அவசியமற்ற விஷயங்களில் தாராளம் காட்டும் நம்மில் பலர், அவசியமான விஷயங்களில் கையை சுருக்கிக்கொள்கிறோம்
ஆனால் பலரும் அலட்சியமாக நினைக்கும் அவசிய ஒன்றுதான் காப்பீடு திட்டங்கள்
*ஆயுள் காப்பீடு,மருத்துவ காப்பீடு,தனிநபர் விபத்து காப்பீடு* திட்டங்களை அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று காப்பீட்டு முகவர்கள் கூறினால்.......
வியாபாரத்துக்காக கூறுகிறார்கள் என்று சாதாரணமாக ஒதுக்கிவிடுகிறோம்.
ஆனால் காப்பீடு திட்டங்கள் என்பது நிச்சயம் அவசியமான ஒன்று.
காப்பீடு திட்டங்கள் ஏன் அவசியமானது?
நம் வாழ்வில் எப்போதும், எல்லாம் சீராக நடக்க வேண்டும், நமக்கு எந்த அசம்பாவிதமும் நேரக் கூடாது என்று எண்ணுகிறோம். பெரியவர்கள் வாழ்த்தும்போது கூட, 'தீர்க்காயுசா இரு' என்று வாழ்த்துகிறார்கள்.
ஆனால் எவருக்குமே உத்தரவாதமான ஆயுட்காலம் இல்லை.
அப்படி அசம்பாவிதம் ஏதும் நேர்ந்தால், சம்பந்தப்பட்டவரின் குடும்பம் பொருளாதார ரீதியாக கஷ்டப்படாமல் தாங்குவதுதான் ஆயுள் காப்பீடு.
ஒரு மனிதர் நீண்ட நாட்கள் வாழ நினைப்பதே, தனது குடும்பத்தினர் தடுமாறாத நிலையை அடைய வைக்க வேண்டும் என்பதற்குத்தானே! அப்படி நினைக்கும் ஒருவர், தனக்கு ஏதாவது நேர்ந்தால் கூட தனது குடும்பத்தினருக்கு பொருளாதார நிம்மதி கிடைக்க வேண்டும் என்று எண்ணுவதும் இயல்புதானே?
அங்கேதான் கைகொடுக்கிறது, 'பெர்ஸனல் ஆக்ஸிடென்ட்' எனப்படும் தனிநபர் காப்பீடு.குறைந்த பீரியமத்தில் அதிக பலன்கள்.
எதிர்பாராத மருத்துவச் செலவுக்கான பாதிப்புகளை குறைக்க வைப்பது மருத்துவ காப்பீடு.
பலர் கூடியிருக்கும் கூட்டத்தில்,காப்பீடு திட்டங்கள் குறித்து எத்தனை பேருக்குத் தெரியும் என்று கேட்டால் ஏறக்குறைய எல்லோருக்குமே தெரியும் என்று கை தூக்குவார்கள்.
ஆகா, இவ்வளவு பேர் விஷயம் தெரிஞ்சவங்களா இருக்காங்களேன்னு சந்தோஷத்துடன்,
எத்தனை பேர் காப்பீடு திட்டங்கள் எடுத்திருக்கீங்க?'னு கேட்டால் உங்கள் சந்தோஷம் உடனடியாய் வடிந்துவிடும்.
இந்தியா முழுவதும் வெறும் 5 சதவீதம் பேர்தான் இன்சூரன்ஸ் பாலிசி பெற்றிருக்கிறார்களாம். ஆக இன்னும் எத்தனை கோடி பேர் காப்பீடு பெற வேண்டியிருக்கிறது!
வெளிநாடுகளில் எல்லாம் மக்கள் அவர்களே விருப்பப்பட்டு இன்சூரன்ஸ் எடுத்துக்கொள்கிறார்கள்.
அங்கே ஆயுள் காப்பீடு,மருத்துவக் காப்பீடு,தனநபர் விபத்து காப்பீடு வரை எல்லாம் வெகு இயல்பானவை.
ஆனால் நம் நாட்டில் இன்னும் இன்சூரன்ஸ் எடுக்க வற்புறுத்த வேண்டியிருக்கிறது.
காப்பீடு திட்டங்கள் என்பதே, தன்னை நம்பி இருக்கும் குடும்பத்துக்கு, தான் இல்லாமல் போனாலும் நிதிப் பாதுகாப்பை உருவாக்கிக் கொடுப்பதுதான். அந்தப் பாதுகாப்பை போதுமான அளவுக்கு ஒருவர் செய்திருந்தார் என்றால், அவருக்கு ஏதாவது அசம்பாவிதம் நேர்ந்தால் கூட, அவரை நம்பி இருக்கும் குடும்பம் தற்போது வாழும் அதே வாழ்க்கையைத் தொடரமுடியும்.
வாழ்க்கையில் முன்னேற்றம் காண அவகாசம் கிடைக்கும். அதன் மூலம், அந்த குடும்பமும் ஒரு கட்டத்தில் மேலே வந்துவிடும்.
Call 98401 77017 devarajan for Ur Insurance Services, needs
No comments:
Post a Comment