தீ விபத்து, புயல்,மழை, வெள்ளம், மின்னல்-இடி தாக்கும் நிகழ்வு, போன்ற இயற்கை சீற்றங்களால் வீடு மற்றும் வீட்டில் உள்ள பொருட்கள் இன்சூரன்ஸ் காப்பீட்டு திட்டம்
வீட்டு உபயோகப் பொருட்களான TV, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், மைக்ரோவேவ் ஓவன், கம்ப்புயூட்டர், ஏசி, லேப்டாப் ஆகியவற்றுக்கு இன்சூரன்ஸ் கிடைக்கிறது.
இதைத் தவிர, பிற வீட்டுப் பொருட்களான ஆடைகள், திரைச்சீலைகள், சேர், டேபிள்கள் மற்றும் தரைவிரிப்பு போன்றவற்றிற்கு கிடைக்கிறது.
மேலும், தங்க நகைகள், பிற நகைகள் மற்றும் விலை உயர்ந்த கற்கள் போன்றவற்றிற்கும் இன்சூரன்ஸ் கிடைக் கிறது.
நாம் எடுக்கும் இன்சூரன்ஸ் தொகைக்கு ஏற்ப பிரீமியம் வசூலிக்கப்படும்.
காப்பீட்டுக்கான ‘பிரிமியம்’ தொகை பெரிய அளவுக்கு இருக்காது. ஒவ்வொருவரும் மிக எளிதாக செலுத்தும் வகையில்தான் இருக்கும்.
காப்பீடு கோரும் தொழில் நிறுவனங்களுக்கு அவை வைத்திருக்கும் பொருள் மற்றும் அவற்றின் சந்தை மதிப்புக்கு ஏற்ப பிரிமியம் நிர்ணயிக்கப் படுகிறது
சென்னை உட்பட தமிழகத்தில் பெய்த கனமழைக்கு பெரும்பாலான வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. அத்துடன், வீட்டில் இருந்த மின்சாரம், மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் சேதம் அடைந்துள்ளன. அசையும் சொத்து-அசையா சொத்து இரண்டுமே பாதிக்கப்படுகிறது
இவ்வாறு சேதம் அடைந்த பொருட்களுக்கு க்ளைம் எவ்வாறு பெறலாம் ?
க்ளைம் கேட்க்கும்போது பாலிசி காலாவதி ஆகியிருக்கக் கூடாது.
வீடு மற்றும் வீட்டில் உள்ள பொருட்களுக்கு சேதம் ஏற்பட்ட 24 மணி நேரத்தில் இருந்து அதிகபட்சமாக ஒருவாரத்துக்குள் சம்மந்தப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் தெரிவிக்க வேண்டும்.
க்ளைம் கோரும்போது கேட்கும் ஆவணங்களை சரியாக பாலிசிதாரர் சமர்ப்பிக்கும் பட்சத்தில் அதிகபட்சமாக 15 நாட்களுக்குள் அவர்கள் கோரிய இழப்பீட்டுத் தொகையை முழுமையாக பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் (New India, National, United India, Oriental ஆகிய மத்திய அரசு நிறுவனங்கள்) வழங்கி விடும். அதேபோல், வீடு மற்றும் வீட்டில் உள்ள பொருட்கள் ஏதேனும் இயற்கை சீற்றத்தினால் சேதம் அடைந்த பிறகு அவற்றுக்கு பாலிசி எடுத்து க்ளைம் கேட்க்க முடியாது.
Call 9840177017 Devarajan Shanmugam United India Insurance
for taking this FIRE & Allied Insurance, Burglary Insurance for shops/Home,etc
No comments:
Post a Comment