Saturday, June 1, 2019

Personal Accident Care Policy


தனிநபர் விபத்துக் காப்பீடு பாலிசி..! விபத்துகளால் ஏற்படும் இறப்பு, நிரந்தர ஊனம் (கை, கால், கண் பார்வை இழப்பு) தற்காலிக ஊனம் (கை, கால், எலும்பு முறிவு), ஊனம் ஏற்படும் நாட்களில் நமக்கு வரும் வருமானம் / சம்பள இழப்பு ஆகியவற்றுக்கு இந்த பாலிசியில் கவரேஜ் கிடைக்கும். விபத்து என்றால் வாகன விபத்து மட்டுமல்ல, நடந்து செல்லும்போது ஏற்படும் விபத்து, மாடிப்படி, குளியல் அறை போன்றவற்றில் வழுக்கி விழுதல், தீக்காயம், நாய் கடித்தல், பாம்பு கடித்தல், ரயில், சாலை மற்றும் விமான விபத்து போன்ற அனைத்துக்கும் கவரேஜ் உண்டு. ஆண், பெண் என இரு பாலரும் எந்த வயதினரும் இந்த பாலிசியை எடுத்துக்கொள்ளலாம். இதற்கு எந்தவிதமான மருத்துவப் பரிசோதனையும் கிடையாது. கவரேஜ் தொகை ஒவ்வொரு நபரின் மாதச் சம்பளத்திற்கேற்ப மாறுபடும். அதிகபட்சமாக மாதச் சம்பளத்தில் 72 மடங்கு வரை இந்த இன்ஷூரன்ஸ் கவர் எடுத்துக்கொள்ளலாம். கூடுதல் பிரீமியம் செலுத்துவதன் மூலம் விபத்தினால் ஏற்படும் மருத்துவச் செலவுகளையும் நாம் திரும்ப பெற முடியும். அனைவரும் வேலைக்குச் சேர்ந்தவுடன் எடுத்துக்கொள்ள வேண்டிய முக்கியமான பாலிசி இது. Call 98401 77017 Devarajan for Ur Insurance Services, Needs

No comments:

Post a Comment