வாகனம் ஓட்டுதலும் முதுகு வலியும்.!!!
நான்கு சக்கர வாகனம் ஓட்டுதல்:
நான்கு சக்கர வாகனம் ஓட்டும் போது,பயணம் செய்யும் போது,முதுகுப் பாதிப்பு வராமல் இருக்கக் கவனிக்க வேண்டியவை.
1) நான்கு சக்கர வகனம் ஓட்டும் போது தலை பின்புற சாய்மானத்தின் மீது இருத்தல் அவசியம்.மேலும்,கழுத்து நேராகவும்,ஒருபுறம் சாயாமலும் இருத்தல் வேண்டும்.
2) வாகனம் ஓட்டும் போது இடுப்பு (Lumbar) பகுதுயில் இருக்க வேண்டிய இயல்பான வளைவைக் காக்க கீழ் முதுகில் சற்று மேடான குஷன் வைதுக்கொள்ளுதல் அவசியம்.
3) முழங்கால் மூட்டு,இடுப்பின் உயரத்திற்கோ அல்லது சற்று உயரம் அதிகமாகவோ இருக்கலாம்.
4) வாகனம் ஓட்டும்போது அமர்ந்திருக்கும் இருக்கை ஸ்டீயரிங்கை விட்டுச் சற்றுத் தள்ளியும்,பின்புறம் சரிந்தும் இருந்தால் ஸ்டீயரிங்கை இயக்கும் பொருட்டு ஓட்டுனர் முன் குனிந்தோ,கழுத்தை முன் வளைத்தோ அல்லது பின்புறச் சாய்மானத்தை முரையாகப் பயன் படுத்த முடியாமலோ போகும்.எனவே வாகனம் ஓட்டும் போது பின்புறம் அதிகம் சாயாத சாய்மானத்தை உடைய இருக்கையை ஸ்டீரியங்கிற்கு அருகில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
5) அதிக தூரப் பயணதிற்குப் பிறகு உடனே பளு தூக்குவதைத் தவிர்ட்தல் நன்று.
6) கழுத்து மற்றும் இடுப்பு வலி அதிகமாக உள்ளபோது எந்த வாகனத்தையும் ஓட்டுதல் கூடாது.
7) கழுத்து மற்றும் இடுப்பு வலி அதிகம் உள்ளபோது இருசக்கர வாகனங்களில் பயணம் செய்வதையோ,ஆட்டோவில் பயணம் செய்வதையோ தவிர்துப் பேருந்தில் பயணம் செய்யலாம்.அதுவும் முன் இருக்கையிலோ,பின் இருக்கையிலோ அமராமல் நடுவில் உள்ள இருக்கையில் அம்ர்ந்து பயணம் செய்தல் நன்று.
8) அமர்ந்திருக்கும் நிலைக்கு அருகிலேயே பெடல் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்.மேலும்,பெடல் எளிதில் இயக்கும் வண்ணம் இருத்தல் நலம்.
இரண்டு சக்கர வாகனம் ஓட்டுதல்!!!
1) இரு சக்கர வாகனம் ஓட்டும் போது பின்னால் வரும் வாகனத்தைப் பார்க்கவேண்டி,வ ண்டி ஓட்டியபடியே இடுப்பைத் திருப்பிப் பார்ப்பதோ கூடாது.அதற்குப் பதிலாக வாகனத்தின் இருபுறமும் பக்கவாட்டில் உள்ள கண்ணாடியைப் பொருத்துவது நலம்.
2) எல்லோருக்கும் பொதுவாக அமைக்கப்பட்டிருக்கும் கைப்பிடி(Handle Bar)
உயரம் குறைவானவர்களுக்கோ அல்லது அதிக உயரமானவர்களுக்கோ சரியாக பொருந்தாது.எனவே இவர்களுக்குக் கழுத்து மற்றும் தோள்வலி வர வாய்ப்புள்ளது.ஆகையால் கைப்பிடியை நமது உயரத்திற்குத்தகுந்தாற்போல் மாற்றி அமைப்பது நன்று.
3) ஆறுமாதத்திற்கு ஒரு முறை வாகனத்தில் உள்ள அதிர்வு தாங்கி (Shock-Absorber) யைச் சரிசெய்து கொள்வது நன்று.
4) கழுத்து மற்றும் இடுப்பு வலி உள்ளர்கள் மொபட்டில் பயணம் செய்வதை எப்போதும் தவிர்த்தல் நன்று.
5) கழுத்து மற்றும் இடுப்பு வலி உள்ளவர்கள் மொபட்டில் பயணம் செய்வதை எப்போதும் தவிர்த்தல் நன்று
6) குண்டும்,குழியுமாக உள்ள சாலையில் பயணம் செய்தால் அந்த அதிர்வால் வலி அதிகமாகலாம்.
7) கழுத்துப்பட்டை மற்றும் இடுப்பு பெல்ட் அணியுமாறு மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்டவர்கள் பயணத்தின் போது அவசியம் அவற்றை அணிதல் வேண்டு
No comments:
Post a Comment