Wednesday, January 2, 2019

Ulcer


வயிற்றில், குடலில் புண் இருக்கிறதா? விடுதலை பெற மூத்தோர்களின் விளக்கம்! உணவு உண்பதற்கு இரண்டுமணி நேரத்திற்கு முன்பு இரண்டு ஸ்பூன் தேன் அருந்த வேண்டும். பிறகு 10 தினங்கள் தொடர்ந்து செய்து வந்தால் குடல்புண்கள் ஆறிவிடும். கடுமையான வயிற்றுவலி, உள்ளவர்கள் கொதிக்கும் தண்ணீர் ஒரு கப் எடுத்து அதனுடன் ஒரு டீஸ்பூன் தேனை கலந்து ஆற்றவேண்டும். குடிப்பதற்கு போதுமான அளவு சூட்டுடன் அந்த நீரை குடிக்கவேண்டும். இவ்வாறு குடிப்பதனால் வயிற்றுவலி, நின்றுவிடும், ஜீரணக்கோளாறுகளும் குணமாகும். வயிற்றில் எரிச்சல், வயிற்றில் இரைச்சல் இருந்தால் உணவுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு இரண்டு டீஸ்பூன் தேன் அருந்த வேண்டும். தொடர்ந்து சில நாட்களுக்கு அருந்தினால் வயிற்றில் ஏற்படும் எரிச்சல், இரைச்சல் ஆகியன குணமாகிவிடும். இஞ்சியை சிறு துண்டுகளாக வெட்டி ஒரு பாத்திரத்தில் போட்டு அடுப்பில் வைத்து சிவக்கும்படி வறுக்கவேண்டும். அதில் ஒரு கப் நீரையும் இரண்டு டீஸ்பூன் தேனையும் கலந்து காய்ச்சவேண்டும். சுண்டக்காய்ந்ததும் இறக்கி வடிகட்டி அருந்த வேண்டும். இப்படி இருவேளை அருந்தினால் செரிமானம் ஆகாமையால் ஏற்பட்ட பேதி நின்றுவிடும். ஒரு டீஸ்பூன் மிளகைத் தூள் செய்து மெல்லிய துணியில் சலித்துக்கொள்ள வேண்டும். அதில் அரை டீஸ்பூன் தூள் எடுத்து அதனுடன் தேன் கலந்து உட்கொள்ளவேண்டும். செரிமாக்கோளாறுகளால் ஏற்பட்ட வயிற்றுநோய் குணமாகும். அகத்திக்கீரையைக் காம்பு நீக்கி ஆய்ந்தெடுத்து ஆவியில் வேகவைக்கவேண்டும். அதை சாறுபிழிந்து எடுத்து அதனுடன் தேன் கலந்து அருந்தினால் எல்லாவித வயிற்றுக்கோளாறுகளும் குணமாகும். ஆலமரத்திலிருந்து ஒரு டீஸ்பூன் பால் எடுத்து அதில் 1 டீஸ்பூன் தேன் கலந்து அருந்த வேண்டும். அருந்தினால் வயிற்றிலுள்ள புழுக்கள் வெளியேறும், வயிற்றிலுள்ள புண்களும் குணமாகும். குப்பை மேனி செடியின் வேரை இடித்து கஷாயமாக்க வேண்டும். அக்கஷாயத்தில் 30மில்லி எடுத்து அதனுடன் சிறிது தேன் கலந்து அருந்தினால் வயிற்று புழுக்கள் வெளியாகும். பத்து கொன்றை மரப்பூக்களை 100மில்லி பசும்பாலில் இட்டு காய்ச்சி பூ நன்றாக வெந்ததும் வடிகட்டி அதனுடன் 1 டீஸ்பூன் தேன் கலந்து அருந்தலாம். இதனால் வயிற்றுக்கோளாறுகள், வயிற்றுபுண், குடற்புண் ஆகியன குணமாகும். சீதளபேதியை குணப்படுத்த 100மில்லி ஆட்டுபாலை ஒரு டீஸ்பூன் தேன் கலந்து அருந்தவேண்டும். 1தம்ளர் வெந்நீரில் 1 டீஸ்பூன் தேன் கலந்து பின்பு அதில் அரை எலுமிச்சைபழ சாற்றையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கும். நுரையீரலில் சேர்த்துள்ள சளி எல்லாம் கண் காணத இடத்திற்கு ஓடிவிடும். குடல் மற்றும் வயிற்றுக்கோளாறுகள் நீங்கிவிடும். குளிர்ச்சியால் ஏற்படும் எல்லா வியாதிகளையும் உடல் எதிர்த்து நின்று தடுத்துவிடும். இதய பாதிப்புகள் நீங்கி இதயம் பலம் பெறும். புதிய இரத்தம் உடம்பில் பாய்ந்தோடும் அதிகாலையிலும், படுக்கச்செல்வதற்கு முன்பும் பருகவேண்டும். நெல்லிக்காய்களைத் துண்டு துண்டாக்கி தேன், ஏலக்காய், ரோஜா இதழ்கள் சேர்த்து இரண்டு நாட்கள் வெயிலில் காயவைக்கவேண்டும். பின்பு 1டீஸ்பூன் வீதம் காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குணமாகிவிடும். என்றும் இளமையுடன் இருக்கவேண்டுமென விரும்புவோர் தினமும் தேனை அருந்த வேண்டும். நாற்பது வயதை கடந்தவர்கள் தினனும் தேனை அருந்தலாம். ஒரு டீஸ்பூன் தேனை சாப்பிட்டு வந்தால் அரை மணி நேரத்தில் நரம்புகள் சுறுசுறுப்புடன் திகழும். சிலருக்கு கை, கால்கள், விரல்கள், மற்றும் உடல் நடுங்க ஆரம்பிக்கும் . இவர்கள் தினமும் ஒரு தம்ளர் பாலில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நிச்சயம் குணம் காண்பார்கள். ஒரு மேசைக்கரண்டி தேனை இரவில் படுக்கும் போது உண்டு வந்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை மாறும். நரம்புத்தளர்ச்சிக்குத் தேனைவிட சிறந்த மருந்து இல்லை. தேனை துளசி சாறில் கலந்து உபயோகிப்பது சளி தொண்டை வீக்கம், பிராங்டீஸ் எனப்படும் சுவாசத்தொல்லை போன்றவைகளுக்கு மிகவும் நல்லது வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!! For Health Insurance/Mediclaim Services, U can call usat Devarajan 98401 77017 www.starhealthdevarajan.com https://www.facebook.com/mediclaimagent/

No comments:

Post a Comment