Thursday, December 27, 2018

OsteoPorasis


ஆஸ்டியோபொரோசிஸ் பிரச்னையால் ஒவ்வொரு ஆண்டும் 20 லட்சம் பேர் பாதிக்கப்படுகின்றனர். நமது எலும்பு பலமாக இருந்தால்தான் நாம் அனைத்து வேலைகளையும் செய்ய முடியும். பனிக்கட்டி உருகுவதுபோல எலும்பு அடர்த்தி குறைந்துவிட்டால் எலும்புகள் பலவீனமாகிவிடும். இதன் காரணமாக இடுப்பு, மூட்டு, கை எலும்புகள் முறிவு அடையக்கூடும். ஆஸ்டியோபொரோசிஸ் எந்த வயதினருக்கும் வரக்கூடும். ஆண்கள், பெண்கள் இருவருக்குமே இந்தப் பிரச்னை வரலாம். மெனோபாஸ் நிலையில் இருக்கும் பெண்களுக்கு வருவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. மற்றபடி, பெண்களுக்கு 30 வயதில்கூட இந்தப் பிரச்னை வருகிறது. ஆஸ்டியோபொரோசிஸ் பிரச்னை இருப்பவர்களுக்கு எப்போது வேண்டுமாயினும் எலும்பு முறிவு ஏற்படலாம். இதனால் மரணம்கூட நேரலாம். எனவே, அவ்வப்போது பரிசோதனை செய்து, வரும் முன் காப்பது சிறந்தது. ஆஸ்டியோபொரோசிஸ் பிரச்னையால் எலும்பு முறிவு ஏற்பட்டால் சிகிச்சை உண்டு. இந்தியாவைப் பொறுத்தவரை, கால்சியம் குறைபாடு என்பது குறைவுதான். ஏனெனில், பால் முதலான பல பொருட்களில் கால்சியம் இருக்கிறது. உடலில் கால்சியம் சரியாகப் பயன்படுத்தப்படாமைதான் ஆஸ்டியோபொரோசிஸ் பிரச்னைக்குக் காரணம். கால்சியம் நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவது மட்டும் இன்றி, சூரிய ஒளியில் இருந்து கிடைக்கும் வைட்டமின் டி சத்தையும் பெற வேண்டும், வைட்டமின் டி சத்துதான் கால்சியத்தை உடலுக்குக் கிரகிக்கும். மருத்துவர் அனுமதி இன்றி கால்சியம் மாத்திரைகளை வாங்கிப் பயன்படுத்தக் கூடாது. மருத்துவக் காப்பீடுத் திட்டம் எடுத்து வைத்துக் கொள்வது நல்லது. call 98401 77017 Devarajan for more details #StarHealth #Medicalimagent #மருத்துவக்காப்பீடு

No comments:

Post a Comment