Tuesday, December 25, 2018

lOVE uR pARENTS


நமது உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் மனம் அமைதியாக இருக்க முடியும். உடலை வளப்படுத்துவதன் மூலம் மனத்தையும் நலப்படுத்தலாம். உடலை பேனாமல் மணிக்கணக்காக கண்களை மூடி தியானம் செய்வதால் ஒரு பயனும் இல்லை. யோகா, உடற்பயிற்ச்சி என்று ஏதேனும் ஒன்றை ஏன் இரண்டையுமே செய்யலாம். இரண்டையும் செய்தால் இரண்டின் பலனும் கிடைக்காது என்று சிலர் பூச்சாண்டி காட்டுவார்கள், அதை கேட்டு ஏமாற வேண்டாம். சைலேந்திர பாபு அவர்கள் இரண்டையும் செய்பவர் தான். யோகா, உடற்பயிற்ச்சி இரண்டையுமே செய்தால் இரண்டின் பலனுமே கிடைக்காது. உடலுக்கு அது தீங்கு என்பதற்கு எந்த வித அறிவியல் ஆதாரங்களும் இல்லை. வசதி உள்ளவர்கள் Treadmill வாங்கி அதில் தினமும் நடைப்பயிற்சி செய்யலாம். உங்கள் வீட்டில் இருக்கும் காஸ்ட்லி டீவீ, ட்ரெட் மில். இரண்டில் எதால் பலன், பயன் என்று யோசித்து பாருங்கள். உடற்பயிற்ச்சி செய்ய எனக்கு எங்க ஸார் நேரம் என்று பலர் சொல்கிறார்கள். அது அவர்கள் சோம்பேறி தனத்தின் வெளிப்பாடு. அம்பானி போன்ற பெரும் செல்வந்தர்களே உடற்பயிற்சிக்கு என்று தினமும் சில மணி நேரங்கள் ஒதுக்குகிறார்கள். நம்மால் முடியாதா. தினமும் நாலு, ஐந்து மணிக்கு எழுந்து கொள்ள உங்களுக்கு சோம்பேறி தனம். அதை ஒப்பு கொள்ளுங்கள். இன்று எங்கு பார்த்தாலும் Bp, சுகர் என நோயாளிகளின் தேசமாக இன்று நமது நாடு மாறியதற்கு காரணம் நாம் தான். முறையற்ற உணவுமுறை, முறையற்ற வாழ்க்கைமுறை, நாம் உண்ணும் உணவிற்கு ஏற்ப்ப உடலுக்கு தகுந்த வேலை கொடுக்காமை போன்றவைகள் தான். கண் கெட்ட பிறகு சூரிய நம்ஸ்காரம் என்பதை போல் உடல் கெட்ட பிறகே பலர் உடற்பயிற்சி செய்கிறார்கள். எதையும் வரும் முன் காப்பது தானே சிறந்தது. ஒன்றும் வேண்டாம். மாலை நேரங்களில் 1, 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீங்கள் வாகனங்களை உபயோகப்படுத்தாமல் காலை உபயோகப்படுத்துங்கள். காலை கால் டாக்சி ஆக்குங்கள். அவ்வாறு செய்தால் வலம்புரியார் கூறியதை போல். இந்த நாள் மட்டும் அல்ல. உங்களுக்கு எல்லா நாளுமே இனிய நாள் தான் LOVE UR PARENTS www.starhealthdevarajan.com https://twitter.com/licdevarajan https://groups.google.com/forum/… https://business.google.com/posts/l/00889445154232854974 https://www.blogger.com/u/1/blogger.g… https://plus.google.com/…/…/+StarHealthInsuranceAgentChennai

No comments:

Post a Comment