Monday, December 31, 2018

Happy New Year 2019


வாழ்க வளமுடன் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும், அருட்பேராற்றல் கருணையினால், உடல்நலம், நீளாயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞ்ஞானம் பெற்று ஓங்கி வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

Sunday, December 30, 2018

Thanks for Ur Support in 2018


வெற்றிலையின் மருத்துவ குணங்கள் ! தலைவலி: வெற்றிலையைக் கசக்கிக் சாறு எடுத்து அந்த சாற்றில் சிறிதளவு கற்பூரத்தைச் சேர்த்துக் குழப்பி வலியுள்ள இடத்தில் தடவினால் தலை வலி உடனே குணமாகும். தேள் விஷம்: இரண்டு வெற்றிலையை எடுத்து அதில் ஒன்பது மிளகை மடித்து வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கி தேங்காய் துண்டுகள் சிலவற்றினையும் மென்று தின்றால் தேள் விஷம் உடனே முறியும். சர்க்கரை வியாதி: சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு வெற்றிலையின் மருத்துவ குணங்கள் : இரண்டு வெற்றிலையுடன் வேப்பிலை ஒரு கைப் பிடியளவும் அருகம்புல் ஒரு கைப்பிடியளவும் ஒரு சட்டியில் போட்டு 500 மிலி தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க விடவும். தண்ணீரின் அளவு 150 மிலி ஆக குறையும் வரை கொதிக்க விட்டு, பின்பு வடிகட்டி ஆற வைத்து வேளைக்கு 50 மிலி வீதம் மூன்று வேளை உணவுக்கு முன்பு சாப்பிடவும். அல்சர்: அல்சர் உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் அத்தி இலை 1 கைப்பிடி வேப்பிலை 5 ஆகியவற்றை மேலே உள்ள முறைப்படி கசாயம் தயாரித்து மூன்று வேளை அருந்தி வரவும். முற்றின வெற்றிலையைச் சாறு பிழிந்து அதில் இரண்டு அவுன்ஸ் சாற்றுடன் 3 மிளகு அதே அளவு சுக்கு ஆகியவற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் கொடுத்தால் இரைப்பு மூச்சுத் திணறல் குணமாகும். தாம்பூலம் தரித்தல்: நமது உடலில் சுரக்கும் 24 விதமான “அமினோ அமிலங்கள்” வெற்றிலையில் உள்ளன. செரிமானத்துக்கும் பெரிதும் உறுதுணையாகும் இந்த “அமினோ அமிலங்களை” வெற்றிலை மூலம் நாம் அடையும்போது ஜீரணம் எளிதாகின்றது. அதனால்தான் நம்முன்னோர்கள் உணவுக்குப் பின் “தாம்பூலம்” தரிக்கும் வழக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர். வெற்றிலைப் பாக்குடன் கூடிய தாம்பூலம் “மங்கலப் பொருள்” என்பது பலர் அறிந்த உண்மை. ஆனால் நம் முன்னோர் அதில் மருத்துவப் பயனையும் புகுத்தியுள்ளனர். மிகச் சிறந்த “நோய்த்தடுப்பு ஆற்றல்” தாம்பூலத்தில் உள்ளது.வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு இணைந்த தாம்பூலம், மெல்லும் போது உமிழ்நீர் சுரப்பினை தூண்டுவதுடன் ஒரு வித உற்சாக உணர்வினை தருகிறது. பெரும்பாலான நாடுகளில் வெற்றிலைக்கு பால் உணர்வை மற்றும் நரம்பு வலுவேற்றும் சக்தி இருப்பதாக கருதப்படுகிறது. அதனால்தான் புதுமண தம்பதியர்களுக்கு தாம்பூலம் தரிப்பது என்பது ஒரு சடங்காக நடைபெறுகிறது. For Health Insurance/Mediclaim, General Insurance, LIC, Travel Insurance, TWo Wheeler, four Wheeler insurance related Services, U can always Call us at 9840177017 Devarajan www.starhealthdevarajan.com https://www.facebook.com/mediclaimagent/

Saturday, December 29, 2018

Yoga Mudra


தொப்பையை கரைத்து இளமையை மீட்கும் யோகமுத்திரா! ஆசனங்கள், தியானம், உடற்பயிற்சி என்று எதுவாக இருந்தாலும் வயிற்றில் கழிவுகள் இல்லாமல் சுத்தமாக இருப்பது அவசியம். அதற்கு யோக முத்திரா உதவுகிறது. யோக முத்திராவை தொடர்ந்து செய்து வருபவர்களுக்கு முதுகுதண்டில் உள்ள இறுக்கம் நீங்குகிறது. இளமை ஏற்படுகின்றது. முதுகு தண்டுவடம் வழியாக செல்லும் உடலின் முக்கிய நரம்புகள் எல்லாம் பலம் பெறுகின்றன. நல்ல ஆரோக்கியத்தை எட்டுகின்றன. நாள் முழுவதும் சுறுசுறுப்பு தொடர்கிறது. முகத்தில் பொலிவும், தேஜசும் ஏற்படுகிறது. முக்கியமாக இரண்டு குதிக்கால்களும், பெருங்குடலும் இந்த ஆசனத்தின் போது நன்றாக அழுந்துவதால் நீடித்த மலச்சிக்கலும் நீங்குகிறது. குடலை கழுவினால் மட்டுமே உடலை வளர்க்க முடியும் என்பது தமிழ்வாக்கு. அதற்கேற்ப மலச்சிக்கலை நீங்கி மனச்சிக்கலையும் நீக்குவதால் யோக முத்திரா ஆசனங்களில் முத்திரை பதிக்கிறது. இந்த ஆசனம் எளிமையானது. yoga-mudraசெய்முறை: பத்மாசனத்தில் அமரவும். இரண்டு உள்ளங்கைகளையும், இரண்டு குதிங்கால்களின் மேல் வைத்து கைவிரல்களை மூடிக் கொள்ளவும். நிமிர்ந்து நேரே உட்காரவும். நுரைஈரல் நிரம்பும் அளவு நன்றாக மூச்சை உள் இழுக்கவும். இப்போது மூச்சை விட்டுக் கொண்டே முன்பக்கம் தரையை மூக்கு தொடும் வரை குனியவும். இந்த நிலையில் 10 முதல் 15 நொடிகள் இருக்கவும். இப்படி இருக்கும் போது மூச்சை சௌகரியப்படி விடவும் வாங்கவும் செய்யவும். மூச்சை அடக்க வேண்டிய அவசியம் இல்லை. பிறகு மூச்சை இழுத்தவாறே நிமிர்ந்து சாதாரண நிலைக்கு வரவும். இந்த மாதிரி அவரவர்க்கு வேண்டியபடி மூன்று முதல் 7 தடவைகள் வரை செய்யலாம். இந்த ஆசனம் பார்ப்பதற்கு சுலபமாக தோன்றினாலும் செய்வதற்கு அவ்வளவு எளிதாக வந்து விடாது. சிலருக்கு என்ன செய்தாலும் மிகவும் அடிப்படையான ஆசனமான பத்மாசனம் போடவே வராது. அவர்கள் பத்மாசனம் நன்றாக செய்ய வரும் வரை, சாதாரணமாக அமரும் முறையில் சுகாசனத்தில் உட்கார்ந்து, இரண்டு முழங்கால்களுக்கு மேல் இரண்டு உள்ளங்கைகளை வைத்து அழுத்திக் கொண்டு, முன்னுக்கு குனிந்து மூக்கு தரையை தொட முயற்சிக்க வேண்டும். இரண்டு கைகளையும் பின்னுக்கு கட்டிக் கொண்டு தொடவும் முயற்சி செய்யலாம். yoga-mudra-o-simboloஅல்லது சுகாசனத்தில் இரண்டு பெருவிரல்களை கைகளால் பிடித்துக் கொண்டு முன்னுக்கு குனியவும் செய்யலாம். இவைகள் எல்லாம் பத்மாசனம் வராதவர்களுக்கு தான். ஆனால் இடையிடையில் பத்மாசனமும் போட்டு பழக வேண்டும். பிறகு முன் சொன்னது போல் பத்மாசனத்திலிருந்தே குனிய முயற்சி செய்ய வேண்டும். கைகளை குதிகாலின் மீது வைத்துக் கொண்டும் குனியலாம். கைகளை குதிகாலின் மேல் வைத்துக் கொண்டு குனிவது கடினமாக இருந்தால், பின்னுக்கு கைகளை கட்டிக் கொண்டு குனியலாம். சில நாட்களுக்கு பின் கைகளை குதிக்கால்களின் மேல் வைத்துக் குனியலாம். பத்மாசனம் போட்ட படி குனிவதால், கால்கள் ஒன்றை ஒன்று அழுத்தி முதலில் வலிக்கும். நாளடைவில் பழக்கமானால் வலி இருக்காது. சிலருக்கு முன்னுக்கு குனிந்து மூக்கைத் தரையைத் தொட முயற்சி செய்யும் போது பிருஷ்ட பாகம் தூக்கிக் கொள்ளும். அப்படி நேராமல் அழுத்தமாய் தரையில் உட்கார்ந்து பழக வேண்டும். சிலருக்கு தொடை பகுதி அதிக சதைகளுடன் மிகவும் பெரிதாக இருக்கும் போது அவர்கள் முன்குனிந்து தரையைத் தொட கடினமாக இருக்கும். சிலருக்கு வயிறு கொழுப்பு சேர்ந்து தொப்பை விழுந்து இருப்பதாலும் முன்குனிய முடியாது. அவர்கள் எல்லாரும் மற்ற ஆசனங்களுடன் யோக முத்திரவையும் முயற்சி செய்து வந்தால், நாளடைவில் வயிறு, இடுப்பு மற்றும் தொடை பகுதிகளில் உள்ள சதை, நரம்புகள் இளக்கம் பெற்று யோக முத்திரா செய்வதற்கு எளிதாகும். இந்த ஆசனம் செய்ய செய்ய தொப்பை பெருமளவு கரைந்து விடும். வயிற்றை சுற்றி உள்ள கொழுப்பு தான் சர்க்கரை நோய்க்கான அடிப்படை காரணம் என்று தற்போது சொல்கிறார்கள். இந்த வயிற்றை சுற்றிய கொழுப்பை யோக முத்திராவில் எளிதில் கரைத்து, தொப்பையை போக்கி மிகவும் இளமையுடன் காட்சியளிக்க முடியும். தொப்பை கரைவதால் மிகவும் சுறுசுறுப்பு வந்து சேரும். சிலர் ஒல்லியாய் இருப்பார்கள். இவர்களுக்கு தொப்பையும் இருக்காது. ஆனால் இவர்களுக்கும் யோக முத்திரா செய்ய சுலபமாக வராது. காரணம், இவர்களது முதுகுஎலும்பு கட்டை பாய்ந்து இருக்கும். அதாவது, குனிந்து நிமிரும் உடற்பயிற்சிகளே இல்லாத காரணத்தால் முதுகுஎலும்பு வளைய முடியாமல் கட்டை போன்று திடமாக காணப்படும். இவர்களும் தொடர்ந்து யோக முத்திராவை பயிற்சி செய்யும் போது நன்றாக வளைந்து தரையை தொட முடியும். யோக முத்திராவால் முதலில் மூக்கை வைத்து தரையை தொடுவதும்,பின்னர் வாயால் தரையை தொடுவதும் என்று நன்றாக பழக்கமான பிறகு அதே நிலையில் 20 எண்ணும் வரை இருக்க வேண்டும். யோக முத்திரா முழுமையான நிலையில் சாதாரணமாக மூச்சை இழுக்கவும், விடவும் செய்யலாம். குறிப்பு; யோக முத்திராவை வழக்கமாய் செய்யும் பெண்கள் கர்ப்பனமானால் இரண்டு மாதங்கள் வரை தான் செய்ய முடியும். அதன்பின் கைகளை வயிற்றின் குறுக்கே வைக்காமல் 1 மாத கால அளவிற்கு செய்யலாம். இந்த காலத்திற்கு மேல் கர்ப்பமான பெண்கள் இந்த ஆசனத்தை செய்யக்கூடாது. மிகவும் முக்கியமாக கர்ப்ப காலத்தில் இந்த ஆசனத்தை பழகவே கூடாது.பத்மாசனத்தில் மட்டும் உட்காரலாம். https://www.facebook.com/mediclaimagent/ For Insurance related services, Call 98401 77017 Devarajan #starhealth #insurance #mediclaim #healthinsurance

Friday, December 28, 2018

Cornea


Cornea. விழியின் வெண்படலம் தான் Cornea! ரத்தத்தின் சப்தம் கேட்காத தேசம் இது! ரத்தம் மறுத்து, கண்ணை வந்து தழுவும் காற்றை, நேரடியாக எடுத்து சுவாசிக்கும் உடலின் அற்புத பாகம்! விழியில் தூசு விழுந்தால் கசக்காதே! உதடு குவித்து ஊது! ஊத விடு! Devarajan. Ph 9840177017 www.starhealthdevarajan.com https://twitter.com/licdevarajan https://groups.google.com/forum/… https://business.google.com/posts/l/00889445154232854974 https://www.blogger.com/u/1/blogger.g… https://plus.google.com/…/…/+StarHealthInsuranceAgentChennai

File Ur IT retrun in time


DIDN'T FILE YOUR INCOME TAX RETURN? KNOW THESE 3 PENALTIES THAT CAN HOUND TAX DEFAULTERS Filing Income Tax Return is mandatory for a person who’s earned money (read income) in a given Financial Year. It becomes especially crucial if the income earned by you crossed Rs.2,50,000 for FY 2017-18. There are a set of penalties under the IT Act for tax evasion ranging from a fine or even imprisonment that can hound Income Tax defaulters: 1. If an individual fails to pay tax whether wholly, partly or interest under Self- Assessment, then under section 221(1) of the Income Tax Act, an assessing officer can impose a penalty up to the arrear amount of the taxes not paid by an assessee. A demand notice is sent to the tax defaulter, who has to pay the tax due within 30 days. 2. If an individual is found concealing income in order to evade taxes, then as per section 271(C), the tax penalty can range from 100% to 300% of the tax on actual income. 3. The IT department can raid the premises of an individual which it considers a tax defaulter due to concealment of earnings. Under section 271 AAB, a penalty ranging from 10% to 90% could be applicable. Read more at http://starhealthdevarajan.com/news/700 www.starhealthdevarajan.com For Insurance related services, U can always call us at 9840177017 Devarajan

Thursday, December 27, 2018

OsteoPorasis


ஆஸ்டியோபொரோசிஸ் பிரச்னையால் ஒவ்வொரு ஆண்டும் 20 லட்சம் பேர் பாதிக்கப்படுகின்றனர். நமது எலும்பு பலமாக இருந்தால்தான் நாம் அனைத்து வேலைகளையும் செய்ய முடியும். பனிக்கட்டி உருகுவதுபோல எலும்பு அடர்த்தி குறைந்துவிட்டால் எலும்புகள் பலவீனமாகிவிடும். இதன் காரணமாக இடுப்பு, மூட்டு, கை எலும்புகள் முறிவு அடையக்கூடும். ஆஸ்டியோபொரோசிஸ் எந்த வயதினருக்கும் வரக்கூடும். ஆண்கள், பெண்கள் இருவருக்குமே இந்தப் பிரச்னை வரலாம். மெனோபாஸ் நிலையில் இருக்கும் பெண்களுக்கு வருவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. மற்றபடி, பெண்களுக்கு 30 வயதில்கூட இந்தப் பிரச்னை வருகிறது. ஆஸ்டியோபொரோசிஸ் பிரச்னை இருப்பவர்களுக்கு எப்போது வேண்டுமாயினும் எலும்பு முறிவு ஏற்படலாம். இதனால் மரணம்கூட நேரலாம். எனவே, அவ்வப்போது பரிசோதனை செய்து, வரும் முன் காப்பது சிறந்தது. ஆஸ்டியோபொரோசிஸ் பிரச்னையால் எலும்பு முறிவு ஏற்பட்டால் சிகிச்சை உண்டு. இந்தியாவைப் பொறுத்தவரை, கால்சியம் குறைபாடு என்பது குறைவுதான். ஏனெனில், பால் முதலான பல பொருட்களில் கால்சியம் இருக்கிறது. உடலில் கால்சியம் சரியாகப் பயன்படுத்தப்படாமைதான் ஆஸ்டியோபொரோசிஸ் பிரச்னைக்குக் காரணம். கால்சியம் நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவது மட்டும் இன்றி, சூரிய ஒளியில் இருந்து கிடைக்கும் வைட்டமின் டி சத்தையும் பெற வேண்டும், வைட்டமின் டி சத்துதான் கால்சியத்தை உடலுக்குக் கிரகிக்கும். மருத்துவர் அனுமதி இன்றி கால்சியம் மாத்திரைகளை வாங்கிப் பயன்படுத்தக் கூடாது. மருத்துவக் காப்பீடுத் திட்டம் எடுத்து வைத்துக் கொள்வது நல்லது. call 98401 77017 Devarajan for more details #StarHealth #Medicalimagent #மருத்துவக்காப்பீடு

Wednesday, December 26, 2018

Mediclaim Services


We are offering Health Insurance, Mediclaim, General Insurance, Life Insurance solutions in Chennai. Wherever U are U can take Helth Insurance Through Us. We will help U to take Policy through Online from the comfort of Ur home. Friendly service and easy way to apply to your Insurance. for More Info & Services: Contact : S. Devarajan Mobile: 98401 77017 www.starhealthdevarajan.com https://www.facebook.com/mediclaimagent/