ஹெல்த் இன்ஷூரன்ஸ்!
இன்றைய காலகட்டத்தில் மனிதர்களின் சராசரி ஆயுள் 75 ஆண்டுகள் வரை அதிகரித்துவிட்டது. ஆனால், சம்பாதிக்கிற காலம் குறைந்துவிட்டது. இன்றைய தலைமுறையினர் 45 - 50 வயதிலேயே பணி ஓய்வு பெற்றுவிட்டு, தங்களுக்கு பிடித்தமான விஷயங்களை செய்யத் திட்டமிட்டு முதலீடுகள் மற்றும் சேமிப்புகளை செய்கிறார்கள். இது நல்ல விஷயம் என்றாலும் அதிலும் ஒரு குறை வைத்துவிடுகிறார்கள். அதுதான் ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுக்காமல் இருப்பது.
பொதுவாக, ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுப்பவர்கள் 1 - 3 லட்சம் ரூபாய்க்கு எடுக்கிறார்கள். இந்த தொகை போதுமானதாக இருக்காது. மருத்துவ சிகிச்சைகளுக்கு இன்றைய காலகட்டத்தில் சகஜமாக வரும் இதய நோய், புற்றுநோய், சர்க்கரை பாதிப்பு போன்ற வற்றுக்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால் சில லட்ச ரூபாய் நிச்சயம் போதாது. அது மட்டுமின்றி மருத்துவ செலவுகளின் பணவீக்கம் ஆண்டுக்கு சுமாராக 15 - 20% அதிகரித்து வருகிறது.
எனவே, அலுவலகத்தில் வழங்கப்பட்ட ஹெல்த் இன்ஷூ ரன்ஸ் பாலிசியை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், உங் களுக்கு என்று தனியாக ஹெல்த் பாலிசி இருக்கிறதா என்று பாருங்கள். இருக்கிறது என்றால் உங்கள் வயதுக்கு தகுந்த அளவுக்கு கவரேஜ் தொகை இருக்கிறதா என்பதை உறுதிபடுத்துங்கள். உதாரணமாக, நீங்கள் 30 வயதுக்கு கீழ், திருமணமாகாமல் இருக்கிறீர்கள் என்றால் ரூ.5 லட்சம் கவரேஜ் தொகையே போதுமானது. இதுவே நீங்கள் 30 வயதுக்கு மேற்பட்டவராக இருந்து, திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறது என்றால் உங்கள் குடும்பத்துக்கு (மனைவி, கணவன், 2 குழந்தைகள்) ஹெல்த் பாலிசி கவரின் கவரேஜ் தொகை குறைந்தபட்சம் 10 லட்சம் ரூபாய்க்கு இருக்க வேண்டும். இதற்கு டாப் அப் பாலிசியை பயன்படுத்தி குறைந்த பிரீமியத்தில் அதிக கவரேஜ் தொகைக்கு பாலிசி எடுத்துக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment