இயற்கையான சுற்றுச்சுழலை காக்க வேண்டியது நம் கடமை.
சுற்றுச்சூழல் தினத்தின் போது சில முக்கிய விஷயங்களை வாழ்க்கையில் பின்பற்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
கூட்டங்கள், கோஷங்கள், விழிப்புணர்வு கருத்தரங்கங்கள், ஏராளமான மாநாடுகள், ஊர்வலங்கள், சில நிகழ்ச்சிகள் என முன்னெடுப்பதோடு நம் கடமைகள் முடிந்துவிடுகிறதா என்ன?
சூதானமான இயற்கைவள நுகர்வு ஒன்றே தீர்மானமான வழியாக இருக்கமுடியும். அதை நோக்கிய விரிவான செயலாக்கத்திற்கு, களப்பணிக்கு நம்மை தயார்படுத்திக்கொள்வதைத்தவிர மாற்று வழிகள் ஏதுமில்லை என்பதையும் கருத்தில் கொள்க! அதை நோக்கிச்செல்வதே நம் இலக்காக இருக்கட்டும் என இந்நாளில் உறுதியேற்போம்!
உலகம் முழுவதும் ஜூன் 5 ஆம் தேதி உலகச் சுற்றுச்சூழல் தினம் (World Environment Day, June 5) கொண்டாடப்படுகிறது. கடந்த 1972 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஜூன் 5 ஆம் தேதியும் சர்வதேச சுற்றுச் சூழல் தினம் கொண்டாடப்படுகிறது.
No comments:
Post a Comment