Tuesday, August 3, 2021

Life cycle



வாழ்க்கை சக்கரம்.
------------------------
தெரிந்த விஷயம்தான்
ஆனால்
புரிந்து கொள்ளவில்லை...
ஒரு வீட்டில் ஒரு மரணம்
என்பது பெரிய ரணம்.
அவர்களுக்கு..
ஒரு மரணம் நடக்கும் போது
இரண்டு விஷயங்கள் நடக்கும்..
மனக் கஷ்டம்
பணக் கஷ்டம்.
அதிலும் குறிப்பாக
வீட்டின் தலைவர் மரணம் என்றால்
கஷ்டத்தின் அளவு கூடும்.
எல்லோருக்கும் தெரியும்
ஆனாலும்,
அதன் ஆழத்தை புரிந்து
கொள்ள மறுக்கிறார்கள்.
எந்த இழப்பும் மனக் கஷ்டத்தை
அளிக்கும்... கால ஓட்டத்தில்
மனசு சரியாகும் வாய்ப்பு உள்ளது.
காலம் நமக்குத் தோழன்.
ஆனால்
பணக் கஷ்டம்
காலத்தால் சீரமைக்க முடியாது.
அது திட்டமிட்டால்தான்
சரியாகும்.... இதுவும் தெரியும்.
ஆனால் புரிந்து கொள்ள
மறுக்கிறார்கள்..
வந்தவர்கள் அனைவரும்
ஆறுதல் சொல்வாங்க...
ஆலோசனை சொல்வாங்க..
அது எப்படி நம் பணக்
கஷ்டத்தை போக்கும்...
ஒரு குடும்பத் தலைவர்
இறக்கும் போது இரண்டு
நடக்கும்.. எல்லோருக்கும் தெரியும்.
Physical death
Economical death.
Physical death cannot be substituted
But
Economic death can be..
குடும்பத் தலைவர் மறையும் போது
அவரது வருமானமும் மறையும்.
அவருக்கு ஈடு இல்லை.. ஆனால்
அவரது வருமானத்தை ஈடுசெய்ய
வழி உண்டு... வகை உண்டு.
இதைச் சொன்னா
பலருக்கு தெரிந்தாலும்,
புரிந்து கொள்ள மறுப்பார்கள்..
எல்லாம் மற்றவர்க்கே
எனக்கு ஒன்றும் நடக்காது
என்ற அலட்சியம் மட்டுமே
எல்லோருக்கும் வரும்.
இதைத்தான் எங்கள் முகவர்கள்
மக்களை சந்தித்து,
காப்பீடு திட்டம் பற்றி சொல்கிறார்கள்.
அவர்களுக்கும் தெரியும்
ஆனால்
தெரியாத மாதிரி நடந்து
கொள்கிறார்கள்.
கஷ்டப்படாமல் இருக்க
கஷ்டப் படுங்கள் என்று
சொல்வாங்க...
இளமையில்,
உழைக்கும் வயதில்
நாம உழைக்க வேண்டும்...
பணம் சேமிக்க வேண்டும்.
முதுமையில் சேமித்த
நம் பணம் நமக்காக
உழைக்க வேண்டும்...
அவ்வளவுதான்.
தெரிந்த விஷயம் என்று
எண்ண வேண்டாம்..
தெரிந்து மட்டும் என்ன பயன்?
புரிய வேண்டுமே..
புரிய வைக்க வேண்டும்.
மனக் கஷ்டம் நீங்க
ஆண்டவன்...
பணக் கஷ்டம் நீங்க
ஆயுள் காப்பீடு.
கண்ணுக்குத் தெரியும் கடவுள்.
Call S. Devarajan 98401 77017




 

No comments:

Post a Comment