Saturday, April 28, 2018


Road Safety Week சாலை பாதுகாப்பு – நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை சாலை பாதுகாப்பு என்பது வாழ்க்கைப் பயணத்தின் ஒரு முக்கியமான அங்கமாகும். சாலை பாதுகாப்பு நாட்டின் முக்கியமான ஒரு பிரச்சினையாக உள்ளது. அரசு தெரிவிக்கும் ஒரு புள்ளி விவரத்தின்படி ஆண்டு ஒன்றுக்கு ரூ.1.10 இலட்சம் மக்கள் விபத்தினால் உயிர் இழக்கின்றனர் என்பது அதிர்ச்சி தரும் செய்தியாகும். இந்தியா உலகிலேயே அதிக சாலை போக்குவரத்து வசதிகளைக் கொண்ட இரண்டாவது பெரிய நாடாகும். இந்தியாவில் மூன்று மில்லியன் கிலோ மீட்டர் நீளமுள்ள சாலையில் 60% தார்ச்சாலைகளாக உள்ளன. இந்திய பொருளாதார வளர்ச்சிக்குச் சாலைகளின் பங்கு குறிப்பிடத் தக்கவை. ஆனால் சாலையைப் பயன்படுத்துவோர்களுக்கு சாலை விதிகள் பற்றிய விழிப்புணர்வு இல்லாததால் பெரும்பாலான விபத்துக்கள் நிகழ்கின்றன. தற்போது சாலை விபத்துக்களினால் ஏற்படும் உயிரிழப்புக்கள் அதிகமாகவே உள்ளன. ப‌லரின் வாழ்க்கையே முடங்கிப்போகிறது.

No comments:

Post a Comment