Saturday, April 28, 2018


Road Safety Week சாலை பாதுகாப்பு – நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை சாலை பாதுகாப்பு என்பது வாழ்க்கைப் பயணத்தின் ஒரு முக்கியமான அங்கமாகும். சாலை பாதுகாப்பு நாட்டின் முக்கியமான ஒரு பிரச்சினையாக உள்ளது. அரசு தெரிவிக்கும் ஒரு புள்ளி விவரத்தின்படி ஆண்டு ஒன்றுக்கு ரூ.1.10 இலட்சம் மக்கள் விபத்தினால் உயிர் இழக்கின்றனர் என்பது அதிர்ச்சி தரும் செய்தியாகும். இந்தியா உலகிலேயே அதிக சாலை போக்குவரத்து வசதிகளைக் கொண்ட இரண்டாவது பெரிய நாடாகும். இந்தியாவில் மூன்று மில்லியன் கிலோ மீட்டர் நீளமுள்ள சாலையில் 60% தார்ச்சாலைகளாக உள்ளன. இந்திய பொருளாதார வளர்ச்சிக்குச் சாலைகளின் பங்கு குறிப்பிடத் தக்கவை. ஆனால் சாலையைப் பயன்படுத்துவோர்களுக்கு சாலை விதிகள் பற்றிய விழிப்புணர்வு இல்லாததால் பெரும்பாலான விபத்துக்கள் நிகழ்கின்றன. தற்போது சாலை விபத்துக்களினால் ஏற்படும் உயிரிழப்புக்கள் அதிகமாகவே உள்ளன. ப‌லரின் வாழ்க்கையே முடங்கிப்போகிறது.

Friday, April 27, 2018


“வேகம் விவேகமன்று” என்பதை உணர்ந்து, மிதமான வேகத்துடன் அனைவரும் கவனமாக சாலை விதிகளை கடைப்பிடித்தால் மட்டுமே விபத்தில்லா பயணம் சாத்தியமாகும். எனவே, மக்கள் அனைவரும் சாலை விதிகளை முழுமையாகக் கடைப்பிடித்து, விலைமதிப்பற்ற மனித உயிர் இழப்புகளைத் தவிர்க்க உதவ வேண்டும் தமிழகத்தில் கடந்த ஆண்டு 65 ஆயிரத்து 562 விபத்துகள் ஏற்பட்டு 16 ஆயிரத்து 157 பேர் உயிரிழந்தனர். இதில் இருசக்கர வாகன ஓட்டிகள்தான் அதிகம். இந்த நிலையில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் சாலை போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 29-வது சாலை பாதுகாப்பு வார விழா தமிழகம் முழுவதும் நாளை (திங்கட்கிழமை) முதல் 30-ந் தேதி வரை நடக்கிறது. Take Accident Insurance . Call 98401 77017 Devarajan for Services